Search

Custom Search

Monday, January 12, 2009

ஏ.ஆர். ரஹ்மானுக்கு `கோல்டன் குளோப்' விருது

ஏ.ஆர். ரஹ்மானுக்கு `கோல்டன் குளோப்' விருது
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஹாலிவுட் பட உலகின் மிக உயரிய விருதான `கோல்டன் குளோப்' விருது கிடைத்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான்
webdunia photoFILE
இந்த விருதினைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.

பிரிட்டன்
இயக்குனர் டேனி பாயல் இயக்கிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற படத்தில்
வரும் ஒரு பாடலுக்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்த விருது
அளிக்கப்பட்டுள்ளது.


மும்பை
நகரில் வாழும் ஏழைச் சிறுவன், குரோர்பதி போன்றதொரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் பங்கேற்று பணக்காரனாவதை சித்தரிக்கும் வகையில் இப்படம்
எடுக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் அனில் கபூர், இர்பாஃன் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் குல்சார் எழுதிய 'ஜெய் ஹோ' என்ற பாடலுக்காக, ஏ.ஆர். ரஹ்மானுக்கு 'கோல்டன் குளோப்' விருது கிடைத்துள்ளது.

இதனமூலம் இசை வரலாற்றில் ரஹ்மான் புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில், ரஹ்மானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த
திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த நாடக படம் ஆகியவற்றுக்காகவும் `ஸ்லம்
டாக் மில்லியனர்' கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளது.


மும்பை விக்டோரிய டெர்மினஸ் ரயில் நிலையத்தின் பல பகுதிகளிலும் `ஸ்லம் டாக் மில்லியனர்' படம் எடுக்கப்பட்டது.

தமிழகத்தைச்
சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் பாலிவுட் உலகிலும் தடம்பதித்ததுடன், சர்வதேச
அளவில் ஒரு விருதினைப் பெற்றிருப்பதால், இந்திய திரைப்படத்திற்கே கவுரவம்
கிடைத்துள்ளது எனலாம்.


'கோல்டன் குளோப்' விருது வென்றுள்ள ரஹ்மானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

‌திரும‌‌ங்கல‌ம்: த‌ி.மு.க அமோக வெ‌ற்‌றி

‌திரும‌‌ங்கல‌ம்: த‌ி.மு.க அமோக வெ‌ற்‌றி

நட‌ந்த
முடி‌ந்த ‌திரும‌ங்கல‌மச‌ட்டம‌ன்ற தொகுதி இடை‌த்தே‌‌ர்த‌லி‌ல் ‌ி.ு.க. வே‌ட்பாள‌ரலதஅ‌‌தியமா‌ன் 39,266 வா‌க்கு‌க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌லவெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர். அவரஎ‌தி‌‌ர்‌த்து‌பபோ‌ட்டி‌யி‌ட்ட அ.இ.அ.‌ி.ு.க. வே‌‌ட்பாள‌ரமு‌த்துராம‌லி‌ங்க‌ம் 40,156 வா‌க்குகளபெ‌ற்றா‌ர்.

webdunia photoFILE
மதுரமாவட்டம் திருமங்கலமதொகுதி ச‌‌ட்ட‌ம‌ன்உறு‌ப்‌பினராஇருந்வீர. இளவரசன் (ம.ி.ு.க.) மரணமஅடைந்ததைததொடர்ந்து, அங்கஇடைத்தேர்தலஅறிவிக்கப்பட்டு, கடந்த 9ஆ‌மதேதி வாக்குப்பதிவநடைபெற்றது.

ி.ு.க. சா‌‌பி‌லலதஅதியமா‌ன், அ.இ.அ.ி.ு.க. சா‌‌ர்‌பி‌லமுத்துராமலிங்கம், ே.ு.ி.க. சா‌‌ர்‌பி‌லதனபாண்டியன், அகிஇந்திசமத்துமக்களகட்சி சா‌ர்‌பி‌லபத்மநாபனஉள்பட 26 பேரஇந்தேர்தலிலபோட்டியிட்டனர்.

திரும‌ங்கல‌மதொகு‌தி‌யி‌லமொத்தமஉள்ள 1 லட்சத்து 55 ஆயிரத்து 647 வாக்காளர்களில், 1 லட்சத்து 38 ஆயிரத்து 369 பேரவாக்கஅளித்தனர். 88.89 ‌விழு‌க்காடவாக்குகளபதிவாயின.

இத்தேர்தலிலப‌திவாவா‌க்குக‌ளமதுரமருத்துகல்லூரி‌யி‌லபல‌த்பாதுகா‌ப்புட‌னஇ‌ன்றகாலை 8 ம‌‌ணி‌க்கஎண்ணப்பட்டன. காலை 8 மணிக்கவாக்கஎண்ணிக்கதொட‌ங்‌கியது. முத‌லசு‌ற்‌றி‌லஇரு‌ந்தே ‌ி.ு.க. வே‌‌ட்பாள‌ரலதஅ‌தியமா‌னமு‌ன்‌னிலை‌யி‌லஇரு‌ந்தவ‌ந்தா‌ர்.

பி‌ற்பக‌ல் 11.45 ம‌ணி‌க்கவா‌க்கஎ‌ண்‌ணி‌க்கமுடி‌வடைந்தமுடிவஅறிவிக்கப்பட்டது. ‌ி.ு.க. வே‌‌ட்பாள‌ரலதஅ‌‌தியமா‌ன் 79,422 வா‌க்குக‌ளபெ‌ற்றவெ‌ற்‌றி பெ‌ற்றார்.

இவருக்கஅடுத்தபடியாக .இ.அ.‌ி.‌ு.க. வே‌ட்பாள‌ரமு‌த்துராம‌லி‌ங்க‌ம் 40,156 வா‌க்குக‌ளபெ‌ற்றா‌ர். இதன்மூலமஅதிமுவேட்பாளரவிலதஅதியமான் 39,266 வா‌க்குக‌ளஅதிகமபெற்றஅமோவெற்றி பெற்றார்.

‌‌விஜயகா‌ந்ததலைமையிலாே.ு.‌ி.க.வினவே‌ட்பாள‌ரதனபா‌ண்டி‌ய‌னுக்கவெறு‌ம் 13,136 வா‌க்குகளகிடைத்தன. இவரகட‌ந்தே‌ர்த‌‌லி‌லபெ‌ற்வா‌க்கை ‌விஇ‌ந்தே‌ர்த‌லி‌லகுறைவாவா‌க்குகளபெற்று‌ டெபா‌சி‌ட் இழ‌ந்து‌ள்ளா‌ர்.

சர‌த்குமா‌ரதலைமையிலாஅகிஇந்திசமத்துமக்களகட்சி சார்பிலபோட்டியிட்ட ப‌‌த்மநாப‌னவெறும் 831 வா‌க்கு‌க‌ளபெ‌ற்றடெபா‌சி‌ட் தொகையஇழந்துள்ளார்.

பெட்ரோல், கேஸ் விலை குறைப்பு 10 நாளில் அறிவிக்கப்படும்

பெட்ரோல், கேஸ் விலை குறைப்பு
சர்வதேச சந்தையில்
கச்சா எண்ணெயின்
விலை குறைந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல்,
சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அரசு
அறிவித்துள்ளது.


இந்நிலையில்
விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு அடுத்த 10 நாட்களில் வெளியிடப்படும் என்று
மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தின்ஷா பட்டேல் தெரிவித்துள்ளார்.


புதுடெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகுறைப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

விலை
குறைப்பு குறித்து நிதியமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு
வெளியிடப்படும் என்றும், கண்டிப்பாக விலை குறைப்பு இருக்கும் என்றும் அவர்
கூறினார்.


நடுத்தர
மக்கள், விவசாயிகள், இந்த விலை குறைப்பு மூலம் நிவாரணம் பெறுவார்கள் என்று
கூறிய தின்ஷா பட்டேல், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விலை குறைப்பு
எவ்வளவு என்பது பற்றி விவாதித்து முடிவு செய்யப்படும் என்றார்.

லாரிகள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

லாரிகள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

நாடு முழுவதும் லாரி
உரிமையாளர்கள் கடந்த 8 நாட்களாக மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தம் இன்று
மாலை முடிவுக்கு வந்தது. இதையடுத்து சரக்கு போக்குவரத்து ஓரிரு நாட்களில்
சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டீசல்
விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி
உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தத்தால், நாடு முழுவதும்
பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.


லாரிகள்
போக்குவரத்து பாதிப்புக்குள்ளானதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்
கடுமையாக உயர்ந்து வந்தன. குறிப்பாக காய்ய்கறிகளின் விலை கடுமையாக
உயர்ந்து காணப்பட்டன.


இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், அரசுப் பிரதிகளுக்கும் இடையே திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அகில
இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்கள்
அரசின் முன் வைத்த, கைது செய்யப்பட்டுள்ள தங்களது பிரதிநிதிகளை விடுதலை
செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுப் பிரதிநிதிகள் ஏற்றுக்
கொண்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தத்தைக் கைவிடுவது என்று முடிவானது.


வேலை நிறுத்தம் விலக்கிக் கொண்டதாக அறிவிப்பை மோட்டார் காங்கிரஸ் பிரதிநிதிகள் இன்று மாலை புதுடெல்லியில் வெளியிட்டனர்.

டீசல்
விலையைக் குறைக்க வேண்டும், நாடு முழுவதும் ஒரே தேசிய பெர்மிட் வழங்க
வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா
முழுவதும் கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம்
தொடங்கியது.


தொடர்ந்து
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் கைது
செய்யப்பட்டனர். என்றாலும் லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை.


இதற்கிடையே
மத்திய கப்பல் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
டி.ஆர். பாலு, லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்
என்று அழைப்பு விடுத்திருந்தார்.


இந்நிலையில்
இன்று புதுடெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு
எட்டப்பட்டதைத் தொடர்ந்து லாரிகள் வேலை நிறுத்தம் திரும்பப்
பெறப்பட்டுள்ளது.


இதனால்,
தமிழகத்தின் சேலம், ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும்
தேங்கிக்கிடக்கும் சரக்குகள் அடுத்த சில தினங்களில் லாரிகள் மூலம் அனுப்பி
வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


காய்கறிகள் விலையும் விரைவில் குறையும் எதிர்பார்க்கப்படுகிறது.