Search

Custom Search

Wednesday, January 14, 2009

டெல்லியில் கடும் மூடுபனி; விமானங்கள் தாமதம்



[faa post]
தலைநகர் டெல்லியில்
கடுமையான மூடுபனி காரணமாக இன்று காலை, இந்திரா காந்தி சர்வதேச விமான
நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் வந்திறங்குவதும் பெரிதும்
பாதிக்கப்பட்டது.


விமான
நிலைய ஓடுபாதையில் போதிய வெளிச்சமின்மையால் பல விமானங்களின் புறப்பாடு,
விமானங்கள் தரையிறங்குவதும் பாதிப்புக்குள்ளானதாக விமான நிலைய வட்டாரங்கள்
தெரிவித்தன.


காலை
9 மணி வரை மூடுபனி காணப்பட்டதாகவும், இதனால் 18 விமானங்கள்
தாமதமானதாகவும், 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள்
கூறின.


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் வியாழன் குறைக்கப்படும்!

பெட்ரோல், டீசல்,
சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு தொடர்பான அறிவிப்பு நாளை மறுநாள்
வெளியிடப்படும் என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சர்வதேசச்
சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து பெட்ரோல்,
டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வேண்டும் என்று கடந்த 8 நாட்களாக
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு உட்பட பல்வேறு
தரப்பிலிருந்தும் மத்திய அரசிற்கு கோரிக்கைகள் குவிந்துவரும் நிலையில்,
நாளை மறுநாள் கூடவுள்ள மத்திய அமைச்சரவை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு
விலைகளை குறைப்பது குறித்து முடிவு செய்ய உள்ளது.


பெட்ரோல்
விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும்,
சமையல் எரிவாயு விலை உருளை ஒன்றிற்கு 25 ரூபாயும் குறைக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தற்பொழுது
நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலிற்கு
ரூ.9.70மும், ஒரு லிட்டர் டீசலில் ரூ.3.70மும் பொதுத் துறை எண்ணெய்
நிறுவனங்களுக்கு இலாபம் கிடைத்தாலும், சமையல் எரிவாயு உருளை ஒன்றிற்கு
ரூ.31.70 நட்டம் ஏற்படுவதாக பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.


இதேபோல
மண்ணெண்ணைக்கு அளிக்கப்படும் மானியமும் சேர்ப்பதால் பெட்ரோலிய
நிறுவனங்களுக்கு ஏற்படும் இழைப்பை ஈடுகட்ட இந்த நிதியாண்டில் மட்டும்
ரூ.30,000 கோடிக்கு பத்திரங்களை வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


பெட்ரோல்,
டீசல் விலைகளை குறைக்கும் முடிவு எடுக்கக் கூடும் அமைச்சகத்திடம்,
இப்பொருட்களை விலைக் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கும் பரிந்துரையை
பெட்ரோலிய அமைச்சகம் செய்துள்ளது. அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால்,
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு தக்கவாறு பெட்ரோல்,
டீசல் விலைகளை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்தவோ குறைக்கவோ
அதிகாரம் அளிக்கப்படும்.

மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் அரசிற்கு தொடர்பில்லை

மும்பை பயங்கரவாதத்
தாக்குதல்களில் பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ அமைப்புகளின்
தொடர்பிருக்கிறது என்ற இந்திய அரசின் கருத்தை பிரிட்டன் மறுத்துள்ளது.


ஆனால்,
அந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசிற்கு முதன்மையான - அடிப்படையான
பொறுப்பு உள்ளது. அதாவது லஸ்கர்-ஈ- தோய்பாவின் வேர்களை அழிக்க பாகிஸ்தான்
அரசிற்கு அடிப்படை பொறுப்பு உள்ளது என்று பிரிட்டன் அயலுறவு அமைச்சர்
மிலிபேண்ட் தெரிவித்துள்ளார்.


புதுடெல்லி
வந்துள்ள மிலிபேண்ட், இன்று இந்திய அயலுறவு அமைச்சர் பிராணாப் முகர்ஜியைச்
சந்தித்துப் பேசிய பின் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


முன்னதாக
பிரிட்டன் அயலுறவு அமைச்சருடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட பிரணாப்
முகர்ஜி மும்பை தாக்குதல்கள் பற்றிய விவரங்களையும் பாகிஸ்தானுக்கு உள்ள
தொடர்புகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறியதாக ஏஜென்ஸி செய்திகள்
தெரிவிக்கின்றன.


மும்பை
தாக்குதல்களில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ அமைப்புகளின் கை இருப்பதாக
பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை பிரிட்டன் அயலுறவு அமைச்சர் மிலிபான்ட்
மறுத்துள்ளார். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு வழிநடத்தியுள்ளதாக
கூறுவதற்கு இடமில்லை, ஆனால் லஸ்கர்-ஈ- தோய்பா மீதான பாகிஸ்தானின்
அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது என்பது முக்கியமாக கவனிக்கபடவேண்டிய ஒன்று
என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க இந்திய விஞ்ஞானிக்கு விருது

மனித உடலில் செயற்கை
புரோட்டீன்களை உற்பத்தி செய்வதற்கான முக்கிய ஆய்வில் ஈடுபட்டதற்காக
அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானியான டாக்டர். ராம ரங்கநாதனுக்கு எடித் அன்ட்
பீட்டர் ஓ'டனல் விருதை டெக்சாஸ் மாகாண மருத்துவ, பொறியியல் விஞ்ஞானக்
க்ழகம் வழங்கியுள்ளது.


ஆண்டுதோறும்
இந்த விருது விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் மிகச்
சிறந்த ஆய்வை மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் இளம்
ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது.


இந்த விருதை பெறும் நபருக்கு 25,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கபடும்.

டாக்டர் ராம ரங்கநாதன், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் பயலாஜி பிரிவில் இயக்குனராக இருந்து வருகிறார்.

இவரது
ஆய்வு மனித உடலில் செயற்கை புரோட்டீனை உருவாக்குவது பற்றியது என்பதோடு ஒரு
உயிரியல் ஒழுங்கமைப்பு அதன் ஆரோக்கிய மற்றும் ஆரோக்கியமற்ற நிலைகளில்
எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான அடிப்படை ஆய்வுகள் பற்றியதும் ஆகும்.


அதாவது
புரோட்டீன்கள், செல்கள் முதல் திசுக்கள், உறுப்புகள் வரை பல்வேறு செயல்கள்
எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஊடாடி ஒரு சிறந்த உயிரியல் ஒழுங்கமைப்பை
உருவாக்குகின்றன என்பதைப் பற்றிய முழுமையான ஆய்வாகும்.

மும்பைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூச்சல்? கீலானி கேள்வி

மும்பையின் மீது
நடந்த தாக்குதலிற்காக இத்தனை கூச்சல் போடும் உலக நாடுகள், காசா மீது
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலிற்கும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீது
நடத்தப்பட்டுவரும் ‘அக்கிரமங்களுக்கும
’ வாய் திறக்காதது ஏன் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் அலி ஷா கீலானி கேள்வி எழுப்பியுள்ளார்.

கராச்சி
நகரில் நடந்த அரசு விழா ஒன்றில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்
பேசிய பிரதமர் யூசுஃப் அலி ஷா கீலானி, “மும்பைத் தாக்குதல் குறித்து
மட்டும் இவ்வளவு குரல் கொடுக்கும் உலக நாடுகள், அங்கு பாலஸ்தீனத்தில்
குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டனர். மும்பையில் கொல்லப்பட்டவர்களின்
கணக்கிற்கு கொஞ்சமும் குறைவானதல்ல பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டவர்களின்
எண்ணிக்கை. ஆனால் அப்பிரச்சனையில் உலகம் ஏன் மெளனம் சாதிக்கிறது?”
என்று கீலானி கேள்வி எழுப்பியுள்ளார்.


“பெனாசிர்
புட்டோ பாகிஸ்தான் திரும்பியபோது அளிக்கப்பட்ட வரவேற்பின்போது நடந்த
குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமாபாத்திலுள்ள மாரியாட் நட்சத்திர விடுதியின் மீது நடத்தப்பட்ட
பயங்கரவாத தாக்குதலில் பல அயல் நாட்டவர்களும், ஒரு தூதரும்
கொல்லப்பட்டனர். ஆனால் அதற்கெல்லாம் உலக நாடுகள் ஏதாவது கூச்சல் போட்டனவா?
அப்பொழுது எங்கே போயிருந்தது இந்த உலகம்?
என்றும் கேள்விகளை எழுப்பியுள்ள கீலானி, இரட்டை அளவுகோல் இல்லாத உலகை நாம் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு கருணாநிதி வாழ்த்து

தமிழகத்தைச் சேர்ந்த
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகப் புகழ் பெற்ற 'கோல்டன் குளோப்
விருது' கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைவதோடு, அவருக்கு தமிழக
முதலமைச்சர் என்ற முறையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் அடைந்துள்ளா‌ர் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள முதலமை‌ச்ச‌ர், 'ஸ்லம் டாக் மில்லியனர்'' என்ற ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்தமைக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தம‌ி‌ழ்,
இந்தி போன்ற மொழிப் படங்களுக்கு மிகச் சிறப்பாக இசை அமைத்து பல்வேறு
விருதுகளைப் பெற்ற ரஹ்மான் தற்போது உலக அளவில் விருது பெற்றுள்ளார். அவர்
இசைத் துறையில் மேலும் பல வெற்றிகளைக் குவித்திட எனது மனமார்ந்த
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.