Search

Custom Search

Tuesday, January 27, 2009

இந்தியாவுக்கு அமெரிக்காவை விட சிறந்த நட்பு நாடு ஏதுமில்லை: ஒபாமா

இந்தியாவுக்கு அமெரிக்காவை விட சிறந்த நட்பு நாடு ஏதுமில்லை: ஒபாமா
இந்தியாவின் 60வது
குடியரசு தினத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் புதிய
அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா, அமெரிக்கர்களைவிடச் சிறந்த நண்பர்களும்
உறவுகளும் இந்தியர்களுக்குக் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.



FILE
இதுதொடர்பாக
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையேயான நட்பு இயற்கையானது. வலுவான உறவுகள் மூலம்
இந்தியாவும் அமெரிக்காவும் பகிர்ந்து கொண்ட சித்தாந்தங்களும்
கோட்பாடுகளும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையை இருநாடுகளுக்கும்
தந்திருக்கின்றன.


நாட்டின் 60வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு, அமெரிக்கர்களின் சார்பில் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது
விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் இடர்பாடுகளுக்கு தீர்வு காண்கின்றனர்; நமது
மருத்துவர்கள் புதிய மருந்துகளை கண்டறிகின்றனர்; நமது கட்டுமான
வல்லுனர்கள் சமூகத்தை மேம்படுத்துகின்றனர்; நமது நாட்டு தொழில்முனைவோர்
சுபிட்சத்தை ஏற்படுத்துகின்றனர்; நமது கல்வியாளர்கள் எதிர்காலக் கல்விக்கு
அடித்தளமிடுகின்றனர். அந்த வகையில், இந்திய-அமெரிக்க உறவுகள் வலுப்படுவதன்
காரணமாக ஒட்டுமொத்த உலக சமுதாயமும் பயன்பெறுகிறது என ஒபாமா பெருமிதம்
தெரிவித்துள்ளார்.

60வது குடியரசு தினவிழா: பிரதீபா தேசிய கொடியேற்றினார்

60வது குடியரசு தினவிழா: பிரதீபா தேசிய கொடியேற்றினார்
நாட்டின் 60வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தலைநகர்
புதுடெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங்
பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக் கொண்டார். விழாவில் கஜகஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நாஸர்பயேவ்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



PTI
















அணிவகுப்பு
துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக டெல்லியின் இந்தியா கேட் பகுதியில்
உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும்
முப்படைத் தளபதிகள், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து
மரியாதை செலுத்தினார்.


பின்னர்
குடியரசு தினவிழாவுக்கு வந்த அமைச்சர் அந்தோணி, குடியரசுத் தலைவர்
பிரதீபா, கஜகஸ்தான் அதிபரை மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். இதன்பின்னர்
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது 21 துப்பாக்கி குண்டுகள் முழக்கப்பட்டன.


குடியரசுத்
துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா
காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்
ராஜ்பத் பகுதியில் இருந்து குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட்டனர்.


அணிவகுப்பில்
நாட்டின் முப்படை வீரர்களும் இடம்பெற்றனர். இந்திய ராணுவத்தின் வலிமையை
பறை சாற்றும் வகையில் டி-90 பீரங்கிகள், பிரமோஸ் ஏவுகணை, அதிநவீன ரேடார்
கருவிகள், கவச வாகனங்களும் அணி வகுத்து வந்தன.


மும்பையில்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது போல் மீண்டும் தாக்குதல் நடக்காமல்
இருக்க டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குடியரசு
தின விழா நடக்கும் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு
இருந்தது.


ஹெலிகாப்டர்களில் பறந்த படியும், உயரமான கட்டிங்களில் நின்ற படியும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இருதய
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தாலும், 3 வார காலத்திற்கு ஓய்வு
எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங்
குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை. அவரது பணிகளை அமைச்சர்
ஏ.கே.அந்தோணி நிறைவேற்றினார்.

விமான க‌ட்டண‌ம் குறை‌ப்பு

விமான க‌ட்டண‌ம் குறை‌ப்பு

சென்னையில் இருந்து
மும்பை, ஹைதராபாத், திருச்சி ஆகிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில்
விமானத்தில் செல்வதற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சிறப்பு
ஏற்பாடுகளைச் செய்துள்ளது.


ஏர்
இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் இருந்து
மும்பை, ஹைதராபாத், திருச்சி ஆகிய இடங்களுக்கு விமானத்தில் குறைந்த
கட்டணத்தில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


அதன்படி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு ரூ.1,974, மும்பைக்கு ரூ.2,574, திருச்சிக்கு ரூ.1,674 என்ற கட்டணத்தில் செல்லலாம்.

சென்னையில்
இருந்து மும்பைக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் விமானம் செல்லும். மதியம் ஒரு மணிக்கு புறப்படும்
விமானம், மும்பையை பிற்பகல் 2.50 மணிக்கு சென்றடையும்.


சென்னையில்
இருந்து ஹைதராபாத்துக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும்
சனிக்கிழமைகளில் விமானம் செல்லும். இந்த விமானம் சென்னையில் இருந்து
மதியம் 11.35 மணிக்குப் புறப்பட்டு ஹைதராபாத்தை மதியம் 12.35 மணிக்கு
சென்றடையும்.


சென்னையில்
இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில்
விமானம் செல்லும். சென்னையில் இருந்து மதியம் 12.45 மணிக்குப் புறப்படும்
விமானம், திருச்சியை மதியம் 1.35 மணிக்கு சென்றடையும். வரும் மார்ச் மாதம்
31-ந் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.